Friday, October 7, 2016

Amarar Kalki - revisited

A tribute to writer Amarar Kalki. Fully original content. I had written this for my son's fancy dress competition. A slightly simpler/abridged version available here.

----------------------------

ஈன்ற பெற்றோர் இட்ட பெயர் கிருஷ்ணமூர்த்தி,
தமிழ் பயின்ற கற்றோர் முன் என் பட்ட பெயர் கல்கி!


காவேரி நதிக்கரை ஓரத்திலே,
நான் அமர்ந்து யோசித்த நேரத்திலே, 
வந்தன பாத்திரந்கள் என் நெஞ்சத்த்ிலே

வந்தியத்தேவனும், குந்தவை பிராட்டியும்,
பிராட்டியின் தம்பியும், ஆழ்வார்க்கடியான் நம்பியும்,

இவர்கள் காட்டிய வேடிக்கைகள், அதை எழுவது என் வாடிக்கைகள்!

அலை கடலும் ஒயிந்திருக்க, என் அகக்கடலும் பொங்கியது!
'பொன்னியின் செல்வன்' என்னும் காவியம் என் அகத்தில் வந்து தங்கியது!


மஹேந்திரன் என்ற பேரரசன், அவனுக்கு நரசிம்மன் என்ற இளவரசன்

அவன் ஆளப்பிறந்த நகர் காஞ்சி, ஆட்சி புரிந்த நெஞ்சம் சிவகாமி என்னும் வஞ்சி!

இந்தக் காதல் காவியத்த்ில் கண் பட்டது, 
நரசிம்மர் சிவகாமி உள்ளம் புண் பட்டது.

புலிகேசி செய்த வஞ்சனை, 

சிவகாமி அநுபவித்தாள் தண்டனை.


பிரிந்தது இரு உள்ளம், பெருகியது சோக வெள்ளம்!
இதுவே கதையின் கருவானது, 

'சிவகாமியின் சபதம்' உருவானது.

முன்னம் அவன் நாமம் கேட்டவள், மூர்த்தி அவன் வண்ணம் கேட்டவள்.

பல்லவன் அந்த புவியரசனை மறந்தாள், வல்லவன் அந்த ஆடாலரசன் தாள் தலை பட்டாள்.



அடுத்த கதை சற்று வினோதம்! நட்பாக மாறியது ஒரு விரோதம்.
போர்க்களத்த்ில் நிகழ்ந்த ஒரு மரணம்,

அதுவே நட்பை உமிழ்ந்த தருணம்

கனா கண்டான் பார்த்திபன் என்ற சோழன், அதை நிறைவேற்றினான் அவனது ஜடாமுடி தோழன்!

சோழ இளவரசன் பல்லவ இளவரசியின் காதல் மந்திரம்

அதையும் அரசியல் ஆக்கியது சக்ரவர்த்திகளின் ராஜ தந்திரம்!

அந்தக் காவியம் 'பார்த்திபன் கனவு', இந்த தமிழ்ச் சபைக்கு என் புது வரவு.


'சோலைமலை இளவரசி', 'கள்வனின் காதலி', அவர்கள் ஆசையில் எழுந்த 'அலை ஓசை', ஒலித்த இடமோ 'தியாக பூமி'.

என் காலம் முடிய நான் விட்ட நூல், 'அமர தாரா'.

அந்த நூலை முடிக்க எவரேனும் இங்கு வந்தாரா?

அந்த காலத்து விடுதலை போராட்டம்

அதிலே சென்றது என் நாட்டம்
கதைகள் கவிதைகள் கட்டுரைகள் என்பதில் என் தமிழ் ஓட்டம்.

தமிழுக்கு நான் ஒரு சிறு தொண்டன்.

அதனாலே மக்கள் மனதில் என்றுமே நான் அமரன்.

-------------------------

Note: This is wholly written by me. If the readers are impressed (am happy :-D :-D)and want to use it in their projects, they are free to do so. However, they are expected to give due credit/reference to my page in their projects! Otherwise I think it mounts to plagiarism! ;) ;)

No comments: